UPSC 2021 சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது - barathi ias academy trichy - barathi tnpsc academy trichy
UPSC சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. IAS, IPS உள்பட 24 வகையான இந்திய குடிமையியல் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை ஆண்டுதோறும் யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. அதன்படி நடப்பு 2021 – 2022.ஆம் ஆண்டுக்கான தேர்வு 712 குடிமையியல் பணியிடங்களுக்கான அறிவிப்பு March 4-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள்: 712 விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 24, 2021 வயது: 01.08.2019 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கும் மத்திய அரசின் விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது. தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு வருகிற ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்படும். பின்னர் முதன்மைத் தேர்விலும் தேர்ச்சி பெற்றால் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு முட...