TNPSC பொதுத்தமிழ் - பெயரெச்சம் - பெயரெச்சத்தின் வகைகள் - PODHUTAMIL - GRAMMAR - Bharathi IAS Academy


 TNPSC - பெயரெச்சம் - பெயரெச்சத்தின் வகைகள் - PODHUTAMIL - GRAMMAR

பெயரெச்சம்

பெயரெச்சம்:      

பெயர்ச்சொல்லைக்கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம்.

முற்றுப் பெறாத ஒருவினைச் சொல் ஒரு பெயரைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம்

(எ.கா)  படித்த மாணவன், வந்த வாகனம், தந்த பணம், கண்ட கனவு, சென்ற நாட்கள்

                மேற்கணடவற்றுள் படித்த, வந்த, தந்த, கண்ட, சென்ற போன்றவை பெயரெச்சங்கள் ஆகும்.

பெயரெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?

            படித்த மாணவன்,வந்த வாகனம்,தந்த பணம்,கண்ட கனவு,சென்ற நாட்கள் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று கேட்டால்., நீங்கள் முதலில் உள்ள  படித்த, வந்த, தந்த, கண்ட, சென்ற போன்றவற்றை கணக்கிட்டுதான் பெயரெச்சம் என எண்ண வேண்டும். அதற்காகத்தான் அவை அடிக்கோடிட்டு காட்டப்பட்டிருக்கிறது.

         முதலில் படித்த, வந்த, சென்ற போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள்.அவ்வார்த்தைகள 'அ' என்னும் சத்தத்தோடு முடியும்..

விளக்கம்: படித்த- இதன் கடைசி எழுத்து 'த'

'த' என்ற எழுத்தை பிரித்தால் த்+அ என்று பிரியும்..

            இப்படி வார்த்தையின் இறுதியில் 'அ' என்னும் சத்தம் ஒலித்தால் அது பெயரெச்சம் தான் என முடிவெடுத்துக் கொள்ளவும்.

பெயரெச்சத்தின் வகைகள்:

அ.தெரிநிலைப் பெயரெச்சம் 

ஆ.குறிப்புப் பெயரெச்சம் இ.எதிர்மறைப் பெயரெச்சம் 

ஈ.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் .

அ.தெரிநிலைப் பெயரெச்சம்

      காலத்தை வெளிப்படையாகக் காட்டி, அச்சொல் முடியாமல் நின்று,

பெயர்ச்சொற்களைக் கொண்டு முடிந்தால் அது தெரிநிலைப் பெயரெச்சமாகும். இது மூன்று காலங்களிலும் வரும்.

(எ.கா) படித்த மாணவன்              படிக்கின்ற மாணவன்              படிக்கும் மாணவன்

ஆ.குறிப்புப் பெயரெச்சம்

          காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், ஒரு செயலை உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி பெயர்ச்சொல்லாக முடிந்தால் அதுவே குறிப்பு பெயரெச்சம் எனப்படுகிறது.

(எ.கா.) நல்ல பையன்               கரிய உருவம்

இ.எதிர்மறைப் பெயரெச்சம் (எ.கா.) பாடாத பைங்கிளி               கேட்காத செவி               பேசாத பெண்

சொற்களை வாசித்தாலே எதிர்மறை என எளிதாக அறியலாம்..

ஈ.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்         ஈற்றெழுத்து கெட்டுவரும் எதிர்மறைப்பெயரெச்சம் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாகும். “ஆ” எனும் விகுதியில் முடியும்.

(எ.கா.) பாடா பைங்கிளி     பொய்யா மொழி    வாடா மலர்       பேசா வாய்                   சிந்தா மணி          மாறா அன்பு               செல்லா காசு               தேரா மன்னா

Bharathi IAS Academy 
www.bharathiiasacademy.com

Popular posts from this blog

92 general knowledge questions about India|TNPSC Coaching Centres in Trichy Tamilnadu

விலங்களின் அறிவியல் பெயர் பட்டியல்

எத்தனை ஆறுகள் இமயமலையில் உருவாகிறது?