தமிழ்நாடு நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான தேர்வு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - TNPSC Center in trichy - www.tnpsctrichy.com
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிமையியல் நீதிபதிகளுக்கான தேர்வை ஒத்தி வைத்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலர் வெளியிட்டஅறிவிப்பு:
“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 176 காலிப் பணியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு மார்ச் 28 மற்றும் மார்ச் 29 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு கரோனா வைரஸ் நோய்த் தொற்றை பேரிடராக அறிவிக்கை செய்துள்ளதாலும், தமிழக அரசு கடைப்பிடித்து வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டும் மார்ச் 28 மற்றும் மார்ச் 29 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளதாக அறிவித்திருந்த உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்”.
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி செயலர் அறிவித்துள்ளார்.
ஆதாரம் & நன்றி: https://www.hindutamil.in/news/tamilnadu/544770-postponement-of-selection-tnpsc-notification.html
TNPSC Dove
TNPSC Center in Trichy
IAS Academy in Trichy
Barathi TNPSC Coaching Center Trichy
Barathi IAS Academy Trichy
www.tnpsctrichy.com
0 Comments