ஐங்குறுநூறு தொடர்பான செய்திகள். 🌺 ஐங்குறுநூறு, எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுல் ஒன்று. (அகநூல்). 🌺 இதில் உள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. 🌺 இப்பாடல் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது. 🌺 கபிலர் குறிஞ்சித் திணைப் பாடல்களைக் பாடியுள்ளார். 🌺 பேயனார் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியுள்ளார். 🌺 ஓரம்போகியார் மருதத் திணைப் பாடல்களை பாடியுள்ளார். 🌺 அம்மூவனார் நெய்தல் திணைப் பாடல்களை பாடியுள்ளார். 🌺 ஓதலாந்தையார் பாலைத்திணைப் பாடல்களை பாடியுள்ளார். 🌺 ஆந்தையார் என்பது இவர் இயற்பெயர். (ஓதலாந்தையார்) 🌺 ஓதலூர் என்னும் ஊரினராதலின் ஓதலாந்தையார் என்று அழைக்கப்பட்டனர். 🌺 ஓதலூர் மேலைக் கடற்கரைப் பகுதியில் குட்டநாட்டில் உள்ளது. 🌺 ஆந்தை என்பது ஆதன் தந்தை என்பதன் மரூஉ மொழியாகும். 🌺 மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் கொண்ட அகவற்பாக்களால் தொகுக்கப்பெற்ற அகப்பொருள் நூலாகும். 🌺 திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக ஐந்து திணைகளுக்கும் ஐந்நூறு பாடல்கள் உள்ளன. 🌺 ஐங்குறு நூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலையும் பாரதம் பாடிய பெருந்தேவனாரே இயற்றியுள்ளா...