ஐங்குறுநூறு தொடர்பான செய்திகள்.
🌺 ஐங்குறுநூறு, எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுல் ஒன்று. (அகநூல்).
🌺 இதில் உள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை.
🌺 இப்பாடல் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது.
🌺 கபிலர் குறிஞ்சித் திணைப் பாடல்களைக் பாடியுள்ளார்.
🌺 பேயனார் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியுள்ளார்.
🌺 ஓரம்போகியார் மருதத் திணைப் பாடல்களை பாடியுள்ளார்.
🌺 அம்மூவனார் நெய்தல் திணைப் பாடல்களை பாடியுள்ளார்.
🌺 ஓதலாந்தையார் பாலைத்திணைப் பாடல்களை பாடியுள்ளார்.
🌺 ஆந்தையார் என்பது இவர் இயற்பெயர். (ஓதலாந்தையார்)
🌺 ஓதலூர் என்னும் ஊரினராதலின் ஓதலாந்தையார் என்று அழைக்கப்பட்டனர்.
🌺 ஓதலூர் மேலைக் கடற்கரைப் பகுதியில் குட்டநாட்டில் உள்ளது.
🌺 ஆந்தை என்பது ஆதன் தந்தை என்பதன் மரூஉ மொழியாகும்.
🌺 மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் கொண்ட அகவற்பாக்களால் தொகுக்கப்பெற்ற அகப்பொருள் நூலாகும்.
🌺 திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக ஐந்து திணைகளுக்கும் ஐந்நூறு பாடல்கள் உள்ளன.
🌺 ஐங்குறு நூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலையும் பாரதம் பாடிய பெருந்தேவனாரே இயற்றியுள்ளார்.
🌺 இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
🌺 தொகுப்பித்தவர் சேர மன்னன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை ஆவார்.
🌺 'மறுதரவுப் பத்து" என்பது உடன் போக்கு நிகழ்த்திய தலைவனும் தலைவியும் மீண்டும் வருதற்கண் நிகழும் கூற்றைப் பாடு பொருளாகக் கொண்ட பத்துப்பாடல்களின் தொகுதி என்பதாம்.
இலவச Online Test in Telegram
https://t.me/barathitnpsccenter
TNPSC - Group 1, Group 2, Group 2A, Group 4 & VAO
Barathi IAS Academy Trichy
Barathi TNPSC Coaching Center Trichy
TNPSC TET TRB RAILWAY
POLICE SSC BANK UPSC
Online Classes Test Batches
+919942213225
Website : www.tnpsctrichy.com
Youtube : https://youtu.be/iFt5otEcad8
Whats app Group : https://chat.whatsapp.com/K6n4ZnDYYZOKPyHWu2OcBl
0 Comments