ஏன் TNPSC Group Exam-க்கு படிக்கனும்?

ஏன் TNPSC Group Exam-க்கு படிக்கனும் ?

படிப்பு vs வேலை

பதிமூன்று வயதில் கல்வி ஆர்வம் இழந்து வேலை செல்லவே முடிவு செய்தேன். தாய்மாமனின் அறிவுரையின்படி படிப்பை பின் தொடர்ந்தேன். ஆனால் அரசியலமைப்பு 21(A) இன்று இடம் தராது 6 முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி. 

வேலை vs தொழில்

நடுத்தர குடும்பத்தில் சொந்த தொழில் முடியாத காரியம். வங்கி கடன், கையிருப்பு எதுவுமே உதவாது. வேலை ஒன்றே வாழ்வின் அடுத்த கட்டம்.

தனியார் வேலை vs அரசாங்க வேலை

தனியார் வேலை சேர ஆங்கில தடை, கணினி அறிவுத் தடை ஒவ்வொன்றாக உடைத்து பத்தாயிரம் மாத சம்பளம் பார்க்கவே பத்து ஆண்டு போனது. இதில் சம்பள பாக்கி வேறு. வாங்காத சம்பளங்களில் ஒரு ஆட்டோ வாங்கி விட்டுயிருக்கலாம். 

தமிழக அரசு வேலை vs மத்திய அரசு வேலை

IAS ஆசைக்கு எழுதியது 2 முறை, SSC தேர்வு வருவதை அறிவதே சிரமம். Railway கேட்ட கேள்விகள் நான் படித்த பள்ளி புத்தகத்தில் இருந்தனவா தெரியவில்லை. Bank நாள் கணக்கில் கணிதம் மட்டுமே படித்து 1 அல்லது 2 மதிப்பெண்னில் BE-யிடம் பதவியை தாரைவார்த்தேன். 

கடைசியாய் நான் நேரில் பார்த்த அரசாங்க தேர்வு வெற்றியாளர்கள் TNPSC Group Exam வெற்றி பெறவே நானும் அதையே பின் தொடர்ந்து உள்ளேன். நன்கு யோசித்து பாருங்கள் உங்கள் அருகில் உள்ள அதிக படியான வெற்றியாளர்களின் துறை என்னவென்று. 

TNPSC Group 4 / Group 2/ Group 2A/ Group 1

Syllabus for TNPSC Group Exams எல்லா TNPSC Group Exam பாடமும் ஒன்று தான். நான் எதற்கெல்லாம் தகுதியுடவனாக உள்ளேனோ அதில் வெல்வேன். முயற்சி மட்டுமே என் கையில். 

TNPSC Coaching Center or சுயம்பு

TNPSC Coaching Center சென்று படிக்கலாமா அல்லது சுயம்புவாக வீட்டிலேயே படிக்கலாமா? ஒரே முயற்சியில் போதுவாக TNPSC தேர்வில் வெல்வது ஆகாத ஒன்று. குறுகிய காலமாவது அருகில் அல்லது பொருளாதார நிலை, தரம் பொருத்து சேர்வதே எளிய வழி.

என்ன தான் தேவை TNPSC Group Exam Pass பாண்ண?

1. காலம் : ஒரு வருட காலமாவது படிக்க நேரம் வேண்டும் இல்லை பள்ளிப் பருவத்தில் கல்வியின் ஆர்வமே இங்கு காலத்தை முடிவு செய்யும் குறிப்புகள் படிக்க.

2. தகவல்: தேர்வுப் பற்றிய தகவல்கள் முக்கியம்.  தகவல்கள் பெற www.tnpsctrichy.com or www.tnpsc.gov.in தெரிந்து கொள்ளலாம். 

3. Material : பள்ளிப் புத்தகங்களே முதன்மை. பழையதோ, புதியதோ புத்தங்களே முதல் ஆசான். 

- தொடரும்
Barathi IAS Academy Trichy
Barathi TNPSC Coaching Center Trichy
TNPSC Group 1 / TNPSC Group 2 / TNPSC Group 4 & VAO
www.tnpsctrichy.com


Post a Comment

0 Comments