மத்திய பட்ஜெட்-2020

*♦மத்திய பட்ஜெட்-2020 (முழுமையான விபரம்)*

*📍1.பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றமே இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.*

*📍2. நாட்டின் பொருளாதார கட்டமைப்புகள் வலுவானதாகவே உள்ளன; சாமானிய மக்களுக்கான பட்ஜெட்டாக இது இருக்கும். *

*📍3. இந்தியாவின் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் ஜி.எஸ்.டி வரி முறை செயல் படுத்தப்பட்டுள்ளது.*

*📍4. நேரடி மானியத் திட்டம் விவசாயிகளின் வருவாயை உயர்த்த உதவியுள்ளது; வேளாண் சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.*

*📍5. கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பை உறுதி செய்ய பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.*

*📍6. மார்ச் 2014ல் 52%ஆக இருந்த மத்திய அரசின் கடன் மார்ச் 2019ல் 48.7% ஆக குறைந்துள்ளது.*

*📍7. விவசாயத்துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு: சூரிய மின்சக்தியில் இயங்கும் மோட்டார்களை அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கும் உதவி செய்யப்படும்.*

*📍8. தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக் கவனம் செலுத்தப்படும்.*

*📍9. புதிய கல்விக் கொள்கை விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வரும்.*

*📍10. ஆயுஷ்மான் திட்டத்தின்படி அரசு, தனியார் பங்களிப்புடன் 2,000 மருத்துவமனைகள் நாடுமுழுவதும் அமைக்கப்படும்.*

*📍11. இந்தியாவில் படிப்பதற்கு ‘இன்ட் சாட்’ என்னும் தேர்வுமுறை பின்பற்றப்படும்.*

*📍12. தேசிய காவல்துறை பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.*

*📍13. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறியியல் மாணவர்கள் இண்டர்ன்ஷிப் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.*

*📍14. சாகர் மித்ரா எனும் புதிய திட்டம் மூலம் மீனவர்களை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.*

*📍15. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.*

*📍16. கிராமப்புற பெண்களின் மேம்பாட்டிற்காக ‘தான்ய லட்சுமி’ திட்டம் தொடங்கப்படும்.*

*📍17. தேசிய ஜவுளித்திட்டத்திற்கு 1,480 கோடி ரூபாய் ஒதுக்கீடு.*

*📍18. தேசிய நெசவுத்தொழில் திட்டத்திற்கு 1,480 கோடி ரூபாய் ஒதுக்கீடு.*

*📍19. மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்காக 99,300 கோடி ஒதுக்கீடு.*

*📍20. 2025ம் ஆண்டிற்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை.*

*📍21. இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் ஏற்றுமதி மையமாக்குவதே பிரதமர் மோடியின் கனவு!*

*📍22. காஷ்மீரி மொழியில் பேசி பண்டிட் பிங்காநாத் எழுதிய காஷ்மீரி கவிதையை நிதியமைச்சர், உரையில்  பேசினார்.*

*📍23. தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டிற்கு 27,300 கோடி ஒதுக்கீடு!*

*📍24. உள்நாட்டில் மின்னணு பொருட்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.*

*📍25. ஏற்றுமதியாளர்கள் பயன் பெறும் வகையில் குறைந்த பிரீமியத்துடன் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.*

*📍26. ரயில் பாதையையொட்டிய ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்களில் சூரிய மின் உற்பத்தி செய்யப்படும்.*

*📍27. போக்குவரத்து கட்டமைப்புகளுக்காக ரூ.1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு!*

*📍28. மின்சாரம் மற்றும் புதிப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு 22,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு!*

*📍29. உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டங்களில் இளம் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு!*

*📍30. 2022ம் ஆண்டுக்குள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதியதாக 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும்.*

*📍31. 27,000 கிமீ தொலைவு ரயில்பாதை மின்மயமாக்கப்படும்;  தனியார் - அரசு பங்களிப்புடன் 150 ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.*

*📍32. சென்னை - பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் 2023ம் ஆண்டிற்குள் செயல்படுத்தப்படும்.*

*📍33. ப்ரீபெய்ட் முறையில் மின்சாரத்தை பயன்படுத்த டிஜிட்டல் மின் மீட்டர்கள் அறிமுகம்; மாநில அரசுகள் அடுத்த 3 ஆண்டுகளில் ப்ரீபெய்ட் மின் மீட்டர்களுக்கு மாற வேண்டும்.*

*📍34. பாரத் நெட் திட்டம் மூலம் இந்த ஆண்டிலேயே ஒரு லட்சம் கிராமங்கள் Fibre optic இணையவசதி மூலம் இணைக்கப்படும்.*

*📍35. பழங்குடியின மக்களின் நலனுக்காக ரூ. 53,700 கோடி ஒதுக்கீடு. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ரூ.85000 கோடி நிதி ஒதுக்கீடு.*

*📍36. தேசிய ஊட்டச்சத்து திட்டத்திற்கு ரூ. 35,200 கோடி ஒதுக்கீடு.*

*📍37. கலாச்சாரத்துறைக்கு ரூ. 3,150 கோடி ஒதுக்கீடு.*

*📍38. சுற்றுலாத்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு!*

*📍39. ஹரியானா, உத்தரபிரதேசம், குஜராத், அசாம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர்,  உட்பட5 இடங்களில் அகழாய்வு நடத்த நிதி ஒதுக்கீடு.*

*📍40. சுத்தமான காற்று திட்டத்திற்கு ரூ. 4,150 கோடி ஒதுக்கீடு.*

*📍41. “பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்*
   
*அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து” - திருக்குறள்*

*திருக்குறளில் திருவள்ளுவர் கூறியுள்ள நோயின்மை, செல்வமுடைமை, விளைவுடைமை, இன்பமுடைமை, காவலுடைமை ஆகிய ஐந்து அணிகளும் மோடியின் தலைமையிலான இந்திய அரசுக்கு உள்ளது.*

*📍42. தொடக்க நிலை அரசுப் பணியாளர்களை தேர்வு செய்ய தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்கப்படும்!*

*📍42. 2022ல் ஜி20 நாடுகளின் மாநாடு நடத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.*

*📍43. காஷ்மீர் யூனியன் பிரதேச வளர்ச்சிக்கு ரூ.30,757 கோடியும், லடாக் யூனியன் பிரதேச வளர்ச்சிக்கு 5,958 கோடி ரூபாயும் ஒதுக்கீடு.*

*📍44. மூத்த குடிமக்கள் மேம்பாட்டிற்கு ரூ. 9500 கோடி ஒதுக்கீடு.*

*📍45. வங்கி வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகைக்கான (Deposit) காப்பீடு 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்வு; வங்கித் துறையை உறுதிப்படுத்த பல்வேறு உத்வேக முயற்சிகள் எடுக்கப்படும்.*

*📍46. மத்திய அரசுப் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்கப்படும்.*

*📍47. மத்திய அரசிடம் இருக்கும் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு.* 

*📍48. நிறுவனங்களுக்கான கம்பெனி சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.*

*📍49. புதிய கடன் பத்திரங்கள் மூலம் மத்திய அரசுக்கு நிதி திரட்டப்படும்.*

*📍50. வங்கிகள் திவாலானால் வைப்புத்தொகையில் அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் திருப்பியளிக்கப்படும்.*

*📍51.LIC-யில் உள்ள அரசு பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு.*

*📍52. பொதுத்துறை வங்கிகளுக்கு 2020-21 நிதியாண்டில் மத்திய அரசின் செலவீனம் ரூ. 30.42 லட்சம் கோடியாக இருக்கும்.*

*📍53. அரசின் நிதிப்பற்றாக்குறை 2020-21 நிதியாண்டில் 3.5 சதவிகிதமாக இருக்கும் என கணிப்பு.*

*📍54. வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.*

*📍55. பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் வரை நிதி திரட்டப்படும்.*

*📍56. நேரடி வரிகள் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனி நபர் வருமான வரி செலுத்தும் முறையை மேலும் எளிதாக்கி உள்ளதாக தெரிவித்தார்.*

*📍57. தனிநபர் வருமானவரி குறைப்பு!*

*5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 20% இருந்து 10% ஆக குறைப்பு!*

*7.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 20% இருந்து 15% ஆக குறைப்பு!*

*10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 30% இருந்து 20% ஆக குறைப்பு!*

*12.5 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 30% இருந்து 25% ஆக குறைப்பு!*

*📍58.  2019-2020ல் 19.32 லட்சம் கோடியாக இருந்த நிதி வருவாய் 2020-2021ல் 22.46 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்ப்பு.*

*📍59. தனிநபர் வருமான குறைப்பால் வருடத்திற்கு ரூ.40,000 கோடி வருமான இழப்பு ஏற்படும்.*

*📍60. எரிசக்தி நிறுவனங்களுக்கு 15% வரை வரி சலுகை வழங்கப்படும்.*

*📍61. பி.எஃப், எல்.ஐ.சி பிரீமியம், வீட்டுக்கடன் வட்டி சலுகைகளை பயன்படுத்தாவிட்டால் மட்டுமே வரி சலுகை வழங்கப்படும்.*

*📍62. குறைந்த விலை வீடுகளுக்காக வழங்கப்பட்டு வந்த வட்டி மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு.*

*📍63. உலகிலேயே பெரு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி இந்தியாவில் தான் குறைவாக உள்ளது; ஏற்கெனவே உள்ள 22% கார்ப்பரேட் வரியே தொடரும்.*

*📍64. ரூ.5 கோடி வரை ஆண்டு வர்த்தகம் செய்யும் சிறு, குறு நிறுவனங்களுக்கு தணிக்கை தேவையில்லை.*

*📍65. பான் கார்டுகளை உடனடியாக பெற புதிய முறை அமல்படுத்தப்படும்; ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைனில் பான் கார்டு உடனடியாக வழங்கப்படும்.*
நன்றி - *JcK.நாகராஜன்*

மத்திய பட்ஜெட்-2020
TNPSC Group Exams
Barathi TNPSC Coaching Center Trichy
Barathi IAS Academy Trichy
www.tnpsctrichy.com

Post a Comment

0 Comments