வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றிய வினா விடைகள் - வரலாறு - சமூக அறிவியல்!!! TNPSC

வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றிய வினா விடைகள் - வரலாறு - சமூக அறிவியல்!!! TNPSC

✍ பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தனர்? - ஜூன், 1948

✍ 1946-ல் இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது? - ஜவஹர்லால் நேரு

✍ வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்? - உஷா மேத்தா

✍ மகாத்மா காந்தியடிகளின் 'செய் அல்லது செத்துமடி" என எந்த நிகழ்வின்போது அழைப்பு விடுத்தார்? - வெள்ளையனே வெளியேறு இயக்கம்

✍ சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட ஆண்டு? - 1939
✍ காந்தியடிகளைத் 'தேசத்தின் தந்தை" என்று அழைத்தவர்? - சுபாஷ் சந்திரபோஸ்

✍ ஃபார்வர்டு பிளாக் கட்சியை உருவாக்கியவர் யார்? - சுபாஷ் சந்திரபோஸ்

✍ எந்த ஆண்டு காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்? - அக்டோபர் 1940

✍ எந்த நாடு தென்கிழக்கு ஆசியப் பகுதியில் முன்னேறி வந்ததும், பிரிட்டிஷ் படைகளின் வீழ்ச்சியும் நிலைமையைப் பெரிதும் மாற்றின? - ஜப்பான்

✍ வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற ஆண்டு? - 1942

✍ 1943 அக்டோபர் 21-ல் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை ஏற்படுத்தியவர்? - சுபாஷ் சந்திரபோஸ்

✍ 1943-ல் லின்லித்கோ பிரபுவிற்குப் பின் அரச பிரதிநிதியாகப் பதவியேற்றவர்? - ஆர்கிபால்டு வேவல் பிரபு

✍ மார்ச் 1942-ல் ஜெர்மனியில் இருந்து ஆசாத் ஹிந்து ரேடியோ மூலம் இந்திய மக்களைத் தொடர்பு கொண்டு உரை நிகழ்த்தியவர் யார்? - சுபாஷ் சந்திரபோஸ்

Barathi IAS Academy Trichy
IAS Academy in Trichy
Barathi TNPSC Coaching Center Trichy
TNPSC Center in Trichy
TNPSC Group 1 / Group 2 / Group 4
www.tnpsctrichy.com

Post a Comment

0 Comments